புதுச்சேரி: நாடு முழுவதும் ஆண்டிதோறும் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் அச்சம் தான் காரணம். ஏற்கனவே ஊரடங்கு (Lockdown) உத்தரவால் சுமார் மூன்று மாதக் காலம் அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது பல மாநிலங்களில் கோயில்கள் திறக்க அனுமதி அரசு அளித்துள்ளது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளிக்குமா? இல்லையா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு மத்தியில், புதுச்சேரியில் (Puducherry) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.


ALSO READ |  E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் அதிரடி


இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 


அதில் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi 2020) கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் கலாச்சார கலை நிகிழ்ச்சிகள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுதி இல்லை. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.


ALSO READ |  COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்


புதுச்சேரியில் இதுவரை 5,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 2,227 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 91 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.