விருத்தாச்சலம்: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள்.. சினிமா பாணியில் தாக்கிய கும்பல் - 3 பேர் கைது
Virudhachalam: விருத்தாசலம் அருகே கூழாங்கல் கொள்ளை தொடர்பான ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை சினிமா பாணியில் தாக்கிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் கூழாங்கல் கடத்தப்படுவதாக விழுப்புரம் கனிமவள துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நேற்று இரவு விழுப்புரத்தைச் சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகளான,விழுப்புரத்தை சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம், உதவி புவியியயாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கார் ஓட்டுனர் சேகர் ஆகிய மூவரும் நேற்று நள்ளிரவு கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கொக்கம்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, லாரியில் கூழாங்கற்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
மேலும் படிக்க | சென்னையில் தொழிற்சாலை கேஸ் கசிவு! மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம்!
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூழாங்கல்லை திருடி, கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வழியாக கொண்டு செல்ல முற்பட்டதும் தெரிய வந்தது. இதனால் கனிமவளத் துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கொக்கம்பாளையம் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொலிரோ காரில் வந்த மர்ம கும்பல், லாரியை வழிமறித்து, லாரிக்குள் இருந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கீழே இறக்கி, கொடூரமாக தாக்கி உள்ளனர்.
அப்போது கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை அருகே உள்ள பள்ளத்தில் தலைக்கீழாக கவிழ்த்து விட்டு, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளது. மேலும் அரசு அதிகாரிகள் கழுத்தில் அணிந்து இருந்த, தங்க நகைகளை பறித்து விட்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலால் தலை, கை கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயத்துடன், நடு ரோட்டில் நின்று இருந்த அரசு அதிகாரிகளை, அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாதிக்கப்பட்ட, கனிமவளத் துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை முடித்துவிட்டு, விருதாச்சலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்தில், தன்னை தாக்கிய மர்ம கும்பல் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆலடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கனிமவளத்துறை அதிகாரிகளை தாக்கியது பத்துக்கும் மேற்பட்டோர் எனவும், கூழாங்கல் கடத்தி வந்த லாரியை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு சென்ற மர்ம கும்பல், நேற்று நள்ளிரவில் ஜேசிபி மூலம், லாரியை மீட்டு, இருளக்குறிச்சி கிராமத்தின் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் பதுக்கி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான லாரியின் உரிமையாளரான கொட்டாரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். முதல்கட்டமாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது... முழு பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ