அக்ரி ட்ரோன் மானியத்தைப் பெறும் முதல் நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் தேர்வு
Garuda Aerospace: பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால் 20 லட்சம் விவசாயிகள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது ட்ரோன்கள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இந்த பாதிப்புகள் முற்றிலும் குறைந்துள்ளன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்னி வணிக மையத்தில் கருடா ஏரோஸ்பேஸின் துணை தலைவர் ராகவேந்திரனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஷாம்குமார் "கருடா ஏரோஸ்பேஸின் இந்த ட்ரோன் மூலமாக விவசாயிகளின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும். விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தற்போது ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ட்ரோன்கள் இந்த பணியை வெறும் 8 நிமிடங்களில் முடித்துவிடும்.
ட்ரான்களுக்கான வங்கிக்கடன்களை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமே விவசாயிகளுக்கு பெற்றுத்தருகிறது. ட்ரானின் விலை ஐந்து லட்சமாக இருப்பின் 40 விழுக்காடு மானியத்தொகையான 2 லட்சம் போக மீதமுள்ள பணத்தை தவணை முறையில் விவசாயிகள் செலுத்தலாம். குறிப்பாக இந்த ட்ரோன் மூலம் ஒரே நாளில் 30 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க முடியும்.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதன் மூலம் 20 லட்சம் விவசாயிகள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது ட்ரோன்கள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இந்த பாதிப்புகள் முற்றிலும் குறைந்துள்ளது.
மேலும் படிக்க | பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்! விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு - அன்பில் மகேஷ்
முதலில் ட்ரோன் பயிர்களுக்கு மேல் செலுத்தப்பட்டு பாதிப்புள்ள பகுதிகளை கண்டறியும். பின்னர் அந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும். இதனால் பூச்சிகள் பாதிக்காத மற்ற பகுதிகள் பாதுகாக்கப்பட்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வீணாவதை குறைக்கவும் உதவும். விவசாயத்தில் ட்ரோன்கள் இன்னும் இந்தியாவில் அவற்றின் ஆரம்ப நிலையிலேயே உள்ளன, ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மாற்றியமைத்து விவசாயத் துறையை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்தார்.
OOCA - வால் அங்கீகரிக்கப்பட்ட கருடா கிசான் ட்ரோன்கள், f'amleri பயிர்களின் ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல், தண்ணீர் அல்லது உரம் தேவைப்படும் பகுதிகளைக் அடையாளம் காணும் திறனைக் கொண்டுள்ளன. இந்த மானியத்தின் விளைவாக இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு கருடா கிசான் ட்ரோன்கள் அணுகக்கூடியதாக மாறும். இந்த மானியம் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல முயற்சிகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வேலைகளை கிசான் ட்ரோன்கள் எளிதாகவும் திறமையாகவும் செய்வதன் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் உணவு வீணாவதை குறைக்கவும் உதவும்.
மேலும் படிக்க | திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை! சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ