திண்டிவனம் அருகே ஏ.சி.யில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜி. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து கேஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். 


தூக்கத்தில் இருந்ததால் கியாஸ் கசிந்து இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.