யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் கடந்த இரு தினங்களாக புதிதாக அவர் தொடங்கிய யூடியூப் சேனலில் பல திடுக்கிடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக யூடியூப் பிரபலங்களான மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார், ராஜ்வேல் உள்ளிட்ட சிலர் மதன் வலையில் சிக்கி உள்ளனர். அவர்கள் மது அருந்துவது போலவும், பணம் பெறுவது போலவும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.  மதன் அண்ணாமலைக்கு எதிராக வெளியிட்ட வீடியோவும் பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக ட்வீட்டுகளை வெளியிட்டு வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்தினம் மதன் வீடியோ வெளியிட்டதும், அண்ணாமலை எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என ட்வீட் செய்தார் காயத்ரி. அதன் தொடர்ச்சியாக பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு கேவலமான நிலைமைக்குக் கட்சியைக் கொண்டு போனதாகவும், அமர் பிரசாத் ரெட்டியை ஊரே கழுவி ஊத்தியும், அண்ணாமலை அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை எனவும், அமர் செய்யும் எல்லா குற்றத்திற்கும் பின்புலத்தில் அண்ணாமலை இருக்கிறார் என்பது தான் இதன் அர்த்தம் எனவும் எழுதியுள்ளார்.  


மேலும் படிக்க | பெண்களை பேசி மயக்கி 'பாவம்' செய்த பாதிரியார்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி


மூத்த நிர்வாகிகளின் பேச்சுகளை காது கொடுத்து கேட்காமல் தான் தோன்றிதனமான அண்ணாமலை செயல்படுவது தான் இன்று பாஜக அசிங்கப்பட காரணம் எனவும் அண்ணாமலையை காயத்ரி விளாசியுள்ளார். மதன் ரவிச்சந்திரனனின் ஸ்டிங் ஆபரேஷனின் பின்னணியில் யார் இருந்தாலும் அண்ணாமலை - “தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்  என பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனறும் அவர் பதிவிட்டுள்ளார். இறுதியில் உங்கள் செயல்கள், கர்மாவாகவே உங்களுக்கு வந்துள்ளன, உங்கள் தீய எண்ணத்திலிருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது, நீங்கள் ஒருவரை அழிக்க நினைத்தால், யாரோ ஒருவர் உங்களை அழிப்பார்கள் எனவும் காட்டமாக காயத்ரி எழுதியுள்ளார்.


ஹனிட்ராப், பாஜக தலைவர்கள் பெயரை சேதப்படுத்த வார்ரூமுக்கு, சில ஊடகங்களுக்கு, தலைமை தாங்கும் வார்ரூம் influencersகளுக்கு பரிசுகள் மற்றும் லஞ்சம் பணம் கொடுப்பதன் மூலம் மற்றவர்களை அழிக்க நீங்கள் 10 ஆயிரம் உத்திகளைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த ஸ்டிங் ஆபரேஷன் அண்ணாமலையின் மலிவான மனநிலையை அம்பலப்படுத்தியது. அண்ணாமலையின் போலி விளம்பரம் மற்றும் போலி தலைமைத்துவம் அம்பலமானது என்றும் காயத்ரி விமர்சித்துள்ளார். அண்ணாமலைக்கு பாஜக கட்சிக்குள் ஆதரவு குறைந்து வருவதாகவும், அவருக்கு எதிரான மனநிலையில் தான் பாஜகவினர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு நடுவே மதன் ரவிச்சந்திரனின் வீடியோ மேலும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | திருச்சி: மிளகாய் பொடி சுடு தண்ணீர் ஊற்றி வாலிபர் கொலை..! மனைவி - மாமியார் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ