அண்ணாமலையிடம் ரூ.500 கோடி வாங்காம விட்டறாதீங்க - திமுகவுக்கு காயத்திரி ரகுராம் வலியுறுத்தல்
திமுக சொத்து குறித்து அவதூறு பரப்பியதற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அதனை அண்ணாமலையிடம் வாங்காமல் விட்டறாதீங்க என காயத்திரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலைக்கு நோட்டீஸ்
சித்திரை திருநாளான்று தமிழ்நாடு பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு விவரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது குறித்து ஒருவாரத்திற்குள் திமுகவினர் விளக்கம் அளிக்க வேண்டும், அதன்பிறகு தன்னுடைய தரப்பு விவரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக கூறினார். குறிப்பாக, திமுகவுக்கு 1,408.94 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டிற்கு தேவை ஆன்மீக மாடல்... தோல்வியுற்ற மாடல் திராவிட மாடல் - எல். முருகன்!
திமுகவின் 48 மணிநேர கெடு
இது குறித்து திமுக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுகவின் சொத்து மதிப்பு குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்திருப்பதால் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்டு, வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ.500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனை செய்ய தவறினால் திமுக சார்பில் அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காயத்திரி ரகுராம் வலியுறுத்தல்
இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் காயத்திரி ரகுராம், " திமுக, அண்ணாமலையை விட்டறாதீங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள். அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அதிர்ச்சி! பிறந்த 29 நாட்களே குழந்தை... மண்ணோடு மண்ணாக புதைத்த தாய் - நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ