சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் ஜெர்மன் நாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். லோமன் ஜெனு என்கிற பெண்ணும் அவர்களுடன் வந்திருந்தார்.
மாமல்லபுரத்தில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் லோமன் ஜேனுவும், அவருடன் வந்திருந்தவர்களும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு 15 நாட்களாக அவர்கள், தங்கி இருக்கிறார்கள். பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் வந்து தங்கியுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.


நேற்று மதியம் லோமன் ஜெனுவும் ஜெர்மனை சேர்ந்த 2 பெண்களும் மாமல்லபுரம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே வலது புறத்தில் உள்ள காலியான இடத்துக்கு சென்றனர்.  அங்கு சூரியகுளியலில்  ஈடுபட சிலர் இடையூறாக இருந்ததால் 3 பேரும் 5 கி.மீ தூரத்தில் பட்டிபுளம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றனர். பின்னர் அங்கு சூரியகுளியலில் ஈடுபட்டனர்.


லோமன் ஜெனுவும் மற்ற 2 பெண்களும் உள்ளாடைகளை மட்டும் அணிந்த நிலையில் கடற்கரை மணலில் படுத்து தனித்தனியாக சற்றுதூரத்தில் சூரிய குளியலில் ஈடுபட்டனர். அப்போது லோமன் ஜேனு அயர்ந்து தூங்கி விட்டார். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக கடற்கரை மணலில் படுத்திருப்பதை பார்த்ததும் அவர்களது மனதில் விபரீத எண்ணம் ஏற்பட்டது. அவரை அடைய திட்ட மிட்டனர்.


சூரிய குளியலில் ஈடுபட்ட படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த லோமன் ஜெனுவை வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து கடத்திச்சென்றனர். அப்பகுதியில் இருந்த சவுக்குத் தோப்புக்கு அவரை கடத்திச் சென்ற 3 பேரும் அங்கு வைத்து பாலியல் பலாத் காரம் செய்து கற்பழித்தனர். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையால் லோமன் ஜெனு கடும் அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் சவுக்குத் தோப்பில் இருந்து பதட்டத்துடன் வெளியேறி கடற்கரைக்கு வந்த லோமன் ஜெனு, தான் கற்பழிக்கப்பட்டது பற்றி மற்ற 2 பெண்களிடமும் கூறி கதறி அழுதார். பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.