சென்னை: இந்த ஆண்டு கடுமையான கோடைகாலத்திற்கு (Summer) தயாராகுங்கள், இதன் அறிகுறி ஏற்கனவே மும்பையில் காணப்படுகிறது. அங்கு செவ்வாயன்று 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவானது. இது 1966 -க்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை (Temperature) பதிவு. அதேபோல தமிழ்நாட்டிலும், இந்தமுறை வழக்கத்தை விட வெப்பத்தின் செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. இன்னும் கோடைகாலம் ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முக்கிய தலைநகரிங்களில் மும்பையில் தான் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியதும், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி -India Meteorological Department) செவ்வாயன்று வெப்ப அலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை குறித்து பரிந்துரைத்துள்ளது.


பிப்ரவரியில் அதிகபட்சமாக 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் கேரளாவில் உள்ள பாலக்காடு முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் மிதமான மற்றும் வசதியான காலநிலைக்கு பெயர் பெற்ற கேரளா, நாட்டின் பிற பகுதிகளில் ஏற்படும் வெப்ப வானிலை குறித்து ஒருபோதும் கவலைப்படாமல் இருந்தது. இப்போது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அந்த மாநிலமும் தாங்கி வருகிறது.


இந்த வெப்பநிலை உயர்வு கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின் நுழைவாயில் என அழைக்கப்படும் பெரும்பாலான தென்மேற்கு மாநிலங்களில், மற்ற மாநிலங்களுக்கு முன்பாக வெப்பமடைகிறது மற்றும் வெப்ப அலைகளை ஏற்படும் அளவுக்கு காலநிலை மாற்றம் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் 30 டிகிரி செல்சியஸ் இலக்கைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை காணப்படுகிறது.


ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், கிழக்கு உ.பி., கிழக்கு சத்தீஸ்கர், பீகார், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். அதேபோல குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.