பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான பத்திரங்களை வழங்கினார் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி 14 பெண் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான பத்திரங்களை வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஜெயலலிதாவின் உயர்ந்த சேவையினை நினைவு கூரும் வகையில், அவரது பிறந்த நாளான இன்று (பிப்., 24) ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ஆக அனுசரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.


முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டு தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து, தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.