கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலாமானார். இன்று கோவாவின் தலைநகரமான பானாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலை நான்கு மணி வரை மனோகர் பாரிக்கர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலா அகாடமியில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கோவா மாநில அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


அவரது வரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் மனோகர் பாரிக்கர் இருந்தார். மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். சிறப்பாக மக்கள் பணியாற்றிய மனோகர் பாரிக்கர் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.