சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருசில நாள் விலை அதிகரிக்கும், அடுத்த நாள் விலை குறையும், இப்படி தங்கத்தின் விலையில் ஒரு நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் மாதத்தில், இதுவரை தங்கத்தின் விலை குறையவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கும். ஆனால் விலையில் மாற்றம் வருமா? எனப்பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.


இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ |  தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா? முழு மூவரம்


இன்று கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,537க்கும், சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது


அதேபோல தேசிய தலைநகரம் டெல்லியில் தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்துள்ளது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR