கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.  


உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. இந்த நிலையில், நேற்று விலை குறைந்து மக்களை மகிழ்வித்த தங்கம் இன்று விலை உயர்ந்துள்ளது.


தங்கம் விலை நிலவரம்


சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ. 4,969 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 48 உயர்ந்து 39,752 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. 


மேலும் படிக்க | Gold Rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், இல்லத்தரசிகள் ஹேப்பி, விலை என்ன தெரியுமா 


24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,368 ஆகவும் ஒரு சவரன் ரூ. 42,944 ஆகவும் விற்பனையில் உள்ளது. 


வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.


ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது. 


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு - இது தான் காரணமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR