Michaung Cyclone Relief Funds: சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 , 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் (Cyclone Michaung) ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியிலும், அன்றாட வாழ்வை மேற்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். வெள்ளம் வடிந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பது கடுமையாக ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, சென்னையை எடுத்துக்கொண்டால் வட சென்னை (Vada Chennai) பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. மேலும், கூவம் மற்றும் அடையாறு ஆற்றோரங்களில் உள்ள பகுதிகளும் மழை வெள்ளத்தின்போது பாதிப்புக்கு உள்ளாகின. தாழ்வான பகுதிகளில் வாழ்ந்தவர்களும், தரைத்தளத்தில் வசித்து வந்தவர்களும் இந்த மழை வெள்ளதால் பல்வேறு ரீதியில் பாதிப்படைந்தனர். வட சென்னை, அரும்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. 


மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி-ஐ கலாய்த்த நெட்டிசன்கள்... உடனே குரூப்-2 ரிசல்ட் தேதி அறிவிப்பு!


இதனால், அரசு தரப்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரமாக அறிவிக்கப்பட்டது. சென்னை (Chennai), செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, நியாய விலை கடைகளில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கனும் வழங்கப்பட்டது. 


அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் இன்று காலையில் இருந்தே நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. 


அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத் தொகை (Relief Funds Distribution) மற்றும் அதற்கான படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் இன்று முதல், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | முதல்வராக கேப்டன் இருந்தால்... வேட்டியை மடித்து கடலில் இறங்கியிருப்பார் - பிரேமலதா பேச்சு
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ