சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நராயணபாபு, மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் வரும் 18 ஆம் தேதி வரை மருத்துவ கல்லூரிகளில் சேரலாம் என அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:


தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுதலின் படி இன்று முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளது.


முதல் சுற்றில் மருத்துவ இடங்களை தேர்வு செய்துள்ள மாணவர்கள் 18 ம் தேதிவரை வகுப்புகளில் சேர்த்துக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் முதலில் அறிமுக வகுப்புகள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


பெரும்பாலான பெற்றோர் மாணவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கை படி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மார்ச் 1 ஆம் தேதி துவங்க வாய்புள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க: ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? நீட் வேண்டுமா? வேண்டாமா? ஓர் அலசல்


7.5% உள் ஒதுக்கீட்டின் படி இதுவரை 541 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும் 3 பேர் இன்னும் சேரவில்லை இதுக்குறித்து விசாரிக்கப்படும் என்றார்.


மருத்துவ கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குறித்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் காவல்துறை உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மாணவரின் படிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் படிக்க: Lockdown: கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில்! வகுப்புகள் ஆஃப்லைனில்...


மாணவர்கள் தனிப்பட்ட முறையில் அணுகும் பட்சத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு ஒருவாரம் வரை அவகாசம் பெற்று தரப்படும்.


கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்தால் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்


மேலும் படிக்க: CBSE 2ஆம் பருவத் தேர்வுகள் இந்த தேதியில் தொடங்கும், ஆஃப்லைன் முறையில் நடைபெறும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR