குட் நியூஸ் அளித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி!!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில், திமுக அளித்த பல தேர்தல் அறிக்கைகளில் இது மிக முக்கிய அறிக்கையாக பார்க்கப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடி என்பது மக்களுக்கு உடனடி நிவாரணம் தரும் விஷயம் என்பதால், இது குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட படி, கண்டிப்பாக நகைக் கடன் தள்ளுபடி ஏற்படும் என்ற நம்பிக்கையில், கடன் வாங்கிய பலர் வட்டியும் கட்டாமல் காத்திருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதிச் சுமை கூடிக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
தற்போது 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வந்திருப்பது மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மக்களின் எதிர்பார்ப்பு, கூட்டுறவு வங்கிகளின் நிதிச்சுமை என அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. தகுதியான பயனாளர்கள் பற்றிய தரவும் சேகரிக்கப்பட்டது. ஒரு மாதமாக இந்த பணி நடந்து வந்தது.
உண்மையான ஏழை மக்கள் பயனடையும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும், நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் அரசுக்கு சுமார் 6000 கோடி கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் சமீபத்தில் கூறி இருந்தார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள்ளை கூட்டுறவுத்துறை சேகரித்துள்ளது என்றும், 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தமிழகத்தில் கூடிய விரைவில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, நகைக்கடன் தள்ளுபடி பற்றி இந்த தருணத்தில் அறிவிப்பது, தேர்தலின் போது அக்கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என ஏற்கனவே அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், இன்று வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது என்பது உண்மை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR