சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது பயனுள்ள விசியம் என்றாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் சில மாநிலங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன. இதேபோல தமிழக அரசும் அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது 18-45 வயதுடைவர்களுக்கு மே 1 முதல் மாநிலம் முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்வதாக தமிழக அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தது. இதுபோன்ற முகாம்களின் செலவுகளை மாநில அரசு தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும். மேலும், இந்த சலுகை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ |  Corona Vaccine Price Hike: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநில அரசுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600


அதேபோல கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.


முக்கிய தொழிற்சாலைகள் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்களை தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைத்து தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க மாநில அரசு ஊக்குவிக்கும் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 


ஆக்ஸிஜன் சப்ளை கொண்ட படுக்கைகள் மற்றும் தேவையான மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவுவதை 10% க்கு கீழ் வைத்திருப்பதே அரசின் நோக்கமாகும்.


ALSO READ |  கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்


தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு மக்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஜனவரி 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்தினார். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR