கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 10:28 AM IST
  • கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
  • நாடு முழுவதும் பெரிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு எற்பட்டுள்ளது.
  • மருத்துவ சேவைக்கான ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்யுங்கள்-அரசிடன் உயர் நீதிமன்றம்.
கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம் title=

கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தீயாய் பரவி வரும் தொற்றின் வேகமும் வீரியமும் சென்ற ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு மிக அதிகமாக உள்ளது. மிக முக்கிய பிரச்சனையாக, இம்முறை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்படுகின்றது.

நோயாளிகளின் சுவாசத்தை சீராக்க அவர்களுக்கு ஆக்சிஜன், அதாவது பிராணவாயு அளிப்பது அவசியமாகிறது. எனினும், நோயாளிகளின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக (Oxygen Cylinders) பொதுமக்கள், மருத்துவமனைகள், நிர்வாகம் என அனைத்து தரப்பினரும் தவிக்கும் ஒரு துரதிஷ்டவசமான நிலையை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். 

குறிப்பாக, தொற்று மிக அதிகமாக இருக்கும் சில மாநிலங்களில், ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடும் மிக அதிகமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உட்பட போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் அசாதாரண சூழல் உருவாகி வருகிறது. டெல்லியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். மருத்து வசதிகளின் (Medical Facilities) தட்டிப்பாடு காரணமாக டெல்லியில் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது பீதியைக் கிளப்பும் உண்மையாகும். 

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ வசதிகளின் குறைபாடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.

ALSO READ: அச்சுறுத்தும் TN COVID Update: ஒரே நாளில் 11681 பேருக்கு தொற்று, 53 பேர் பலி

"நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யுங்கள்" என தன் காட்டமான தொனியில் உயர் நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. 

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையை ஒரு நாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதற்கு உயர் நீதிமன்றம், ஆக்சிஜன் கிடைக்காமல் இன்று இரவு யாரேனும் இறந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பேர்பீர்களா என கோவமாக கேள்வி எழுப்பியது. மேலும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை ஏன் மருத்துவமனைகளில் பயன்படுத்தத் தொடங்கவில்லை என்றும் கேட்டது.  

தொழிற்சாலைகளிலிருந்து ஆக்சிஜன் பெறுவது குறித்த சிரமங்களை மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் விவரிக்க, மேலும் கோவமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி, 'மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள். டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. இந்த நிலைமை டெல்லியில் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்" என அறிவுறுத்தினர்.

"தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடப்போவதில்லை. எனவே மருத்துவ சேவைக்கான ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்யுங்கள்" என நீதிபதிகள் கூறினர்.

கொரோனா தொற்றின் (Coronavirus) இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றது. இந்த நிலையில், அடிப்படை விஷயங்களை தவறாமல் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்றி நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டியது நமது கடமையாகும். 

ALSO READ: Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News