ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் கூட்டுறவு வங்கிகள் மூலம் 3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கடன்களைப்  பயனாளிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (Minister KA Sengottaiyan), அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இம்மாதம் இறுதி வரை நடைபெறும் எனத் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் இரு மொழி (Two Language Policy) கொள்கையே தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம். புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்பிறகு முதல்வர் புதிய கல்வி கொள்கை குறித்து இறுதி முடிவு எடுப்பார் எனக் கூறினார்.


மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இம்மாதம் இறுதி வரை நடைபெறும். கூடுதலாக மாணவர்கள் சேர்ந்தாலும், அவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.


ALSO READ | 


செப்டம்பர் 21 முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்


கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் உரிய நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


முன்னதாக நேற்று, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாக வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு (Online Classes Suspended) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதமூலம் மாணவ-மாணவிகள் மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் கிடைக்கும் என தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (KA Sengottaiyan) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல கொரோனா (Coronavirus) சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் கிடையாது என்றார்.