செப்டம்பர் 21 முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்

தடை செய்யப்பட்ட 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறதா என்று கண்காணிக்கப்படும். மீறி ஆன்லைன் வகுப்பு நடத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2020, 08:06 PM IST
  • வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை.
  • 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறதா என்று கண்காணிக்கப்படும்.
  • தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது
செப்டம்பர் 21 முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் title=

சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாக வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு (Online Classes Suspended) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதமூலம் மாணவ-மாணவிகள் மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் கிடைக்கும் என தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (KA Sengottaiyan) தெரிவித்துள்ளார்.  மேலும் தடை செய்யப்பட்ட 5 நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் (Online Classes) நடக்கிறதா என்று கண்காணிக்கப்படும். மீறி ஆன்லைன் வகுப்பு நடத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

அதேபோல கொரோனா (Coronavirus) சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் கிடயாது என்றார்.

ALSO READ | 

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்

குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் (KA Sengottaiyan) மேலும் பேசும்போது, எப்படி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெற்ற பிறகு, விடுமுறை அளிக்கப்படுகிறதோ, அதேபோல மாணவ-மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை (5 நாட்கள்) ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது. இந்த ஐந்து நாட்களில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றார்.

Trending News