Gossip News Tamil : வழக்கமாக டீ மாஸ்டரிடம் கதை சொல்லிக் கொண்டிருந்த குசும்பன், கொஞ்சம் அப்செட்டாக டீக்கடை மூலையில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததுமே இன்னை அவனிடம் தகவல் ஏதும் இல்லை என தெரிந்து கொண்ட மாஸ்டர், "குசும்பா, இங்க வா.. எனக்கு கோட்டை வட்டாரத்தில் இருந்து ஒரு அப்டேட் கிடைச்சிருக்கு சொல்றேன்" என்றார். இதைக் கேட்டதும் "அப்படியாண்ணே, என்ன விஷயம்?" என ஆர்வத்தோடு கேட்டு மாஸ்டரின் அருகில் சென்று அமர்ந்தான் குசும்பன். அதன்பிறகு கதையை சொல்ல ஆரம்பித்த டீ மாஸ்டர், " தம்பி, பக்கமா கேபினட்டுகள் கூட்டம் நடந்துச்சுல்ல, அதுல முதன்மையானவர் சில பைல்களை வச்சிருந்திருக்கார். ஒவ்வொரு கேபின்ட்டுகளோட ரிப்போர்ட்டாம் அது. துறைவாரியா ரிப்போர்ட் கார்டு பார்த்த அவரு, சில பேரோட செயல்பாடுகளில் அதிருப்தியாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார்... காரணத்தை விளக்கிய தங்கம் தென்னரசு!


கூட்டத்துக்கு வந்த கேபினட்டுகள் கிட்ட சரியா வேலை செய்யாதவங்க மேல நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லிட்டாராம். சில பேர் துறைகளை ஒழுங்கா கவனிக்கிறது இல்லை, வேலையும் ஒழுங்கா நடக்க மாட்டேங்குது. அதனால எனக்கும், ஆட்சிக்கும் கெட்டபேர் வருது. திரும்ப திரும்ப இதை சொல்லணும்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற துறையில போய் ஒழங்கா வேலை செய்யுங்க. பெண்டிங்கில் இருக்கிற வேலைகளை எப்படி முடிக்கணும் கலந்தாலோசனை செய்து, இந்த மாதிரி ரிப்போர்ட் வராம பாத்துக்குங்கனு சொன்னாராம். அதேநேரத்துல கேபினட்டுகளில் சிலர் மேல இருக்கிற அதிருப்திய இலைமறைக் காயாக சொல்லிட்டாராம்.



இதனை புரிஞ்சுக்கிட்ட கேபினட்டுகளும் தங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள முதன்மையானவர நேரா சந்திச்சு சொல்லலாம்னு இருக்காங்களாம். ஆனால், அவங்களுக்கு முதன்மையானவர் தரப்பில் இருந்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கலையாம். அதுனால, கேபினட்டுல இருந்து தூக்கப்படப்போறோம்னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்களாம். குறிப்பாக, வனமானவருக்கு இந்த டென்ஷன் இருக்காம். இருந்தாலும், தனக்கு இருக்கிற சோர்ஸ்கள் மூலம் அதிருப்தியை சரி செய்ய முயற்சி பண்றாராம். அவருக்கும், மூத்த அதிகாரிக்கும் இடையில ஏற்பட்ட மனகசப்பு தான் முதன்மையானவர் கிட்ட ரிப்போர்ட் நெகடிவா போக காரணம்னு கூட பேச்சு அடிபடுது. இதுல சில உள்ளடி வேலைகளும் நடந்திருக்கு சந்தேகப்படுறாரு வனமானவர். 


எது எப்படி இருந்தாலும் ஹிட் லிஸ்ட்ல இருக்கிற ஒருசில பேர் விரைவில் மாறக்கூடிய கேபினட்டுல இருந்து நீக்கப்படுவது உறுதி. அவங்களுக்கு பதிலா கேபினட்டுகளை எதிர்பார்த்து இருக்கும் சில மூத்த தலைகளுக்கு கொடுக்கவும் முதன்மையானவர் முடிவு பண்ணிட்டார். அதிகபட்சம் இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்கப்புறம் புது கேபினட் லிஸ்டு வரப்போகுதாம்" என டீ மாஸ்டர் சொல்லி முடிக்க, அப்படியா சேதி என கேட்டுக் கொண்டே கிளம்பினான் குசும்பன்.


மேலும் படிக்க | கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை கசியவிடும் எதிர்கோஷ்டி - கடுப்பில் காக்கி மாஜி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ