Gossip News Tamil : டீ குடிக்க லேட்டா வந்த குசும்பன், காதில் பூ வைத்திருந்தை மாஸ்டர் கவனிக்க, ‘என்ன குசும்பா, காதுல பூ வச்சிருக்க?" என கேட்டார். அவரு கேட்ட அடுத்த நொடியில் ரெண்டு நாளா கதை கேட்க ஆளில்லையே என வருத்தத்தில் இருந்த குசும்பன், மனசில் இருந்ததை எல்லாம் கொட்ட ஆரம்பித்தான். " அண்ணே! இந்த பூவ நானே தான் வச்சுக்கிட்டேன். ஆனால், பூ கட்சியில பல பேர் அவங்க தலைவருக்கு இப்போ வச்சிட்டு இருக்காங்க" என பொடி வச்சு கதையை தொடங்கினான். உடனே டீ மாஸ்டர், "என்னப்பா சொல்றா, கொஞ்சம் விலாவரியா சொல்லு..!" என கேட்டார்.
"அண்ணே, பூ கட்சியில உள் விவகாரங்கள் எல்லாம் கொஞ்ச நாளே சுமூகமாக இல்லனு உங்களுக்கே நல்ல தெரியும். எலெக்ஷன் முடிஞ்சதுல இருந்தே காக்கி மாஜியை தலைவர் பதவியில இருந்து தூக்க பல உள்ளடி வேலைகள் எல்லாம் நடந்துச்சு. இதை தெரிஞ்சுக்கிட்ட முன்னாள் காக்கியும், அமைதியா இருந்துகிட்டாரு. சமயம் வரும்போது பாத்துக்கலாம் அப்படிங்கிறது தான் அவரோட பிளான். அதுக்காக தனக்கு உள்ளடி வேலை செஞ்சவங்க லிஸ்ட் ஒன்னையும் ரெடி பண்ணி வச்சிருக்கிறாரு. சமயம் வரும்போது அந்த தலைகளை உருட்டி விட்டுறலாம் என திட்டம் போட்டு இருக்கிறாரு. எதிர்கட்சிகளை சமாளிக்கிறத விடவும், எதிர்கோஷ்டிய சமாளிக்கிறது தான் அவருக்கு இப்போ இருக்கிற பெரிய பிரச்சனை.
மேலும் படிக்க | கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!
அதுக்காக எதிர்கோஷ்டில இருக்கிறங்க கிட்ட ரொம்ப நெருக்கமாக இருக்கிறதுபோல டெல்லிக்கிட்ட காட்டிக்கிட்டா, இப்போதைக்கு நம்மமேல எந்த போகஸூம் வராது, நிலைமை எல்லாம் சரியானதும் நம்ம வேலைய அப்புறம் காட்டிக்கிலாம்னு பொறுமையா இருக்கிறாராம். அதேநேரத்துல எதிர்கோஷ்டியோட எல்லா மூவ்மென்டையும் கவனிச்சிகிட்டு தான் இருக்கிறாராம். தனக்கு எதிரா யாரெல்லாம் இருக்குறாங்களோ அவங்க என்னென்ன செஞ்சாங்க, செஞ்சிட்டு இருக்கிறாங்க, சொத்துபத்து பட்டியல் எல்லாம் ஃபைலாகவும் காக்கி மாஜி தரப்பு ரெடி பண்ணி வச்சிருக்கு. நமக்கு சிக்கல் வரும்போது அவங்களையும் சேர்த்து சிக்க வச்சிருலாம்ங்கிறதுக்காக தான் இந்த ரகசிய வேலையாம்.
சில பேர் இந்த விஷயத்தை தெரிஞ்சு காக்கி மாஜியோட நேருக்கு நேர மோத வேண்டாம்னு முடிவு பண்ணி, தங்களுக்கு இருக்கிற சோர்ஸ்கள் மூலம் உள் விவகாரங்களை லீக் மட்டும் பண்ணிட்டு இருக்காங்களாம். நிதி விவகாரங்கள் குறித்து தான் டெல்லிக்கு அதிக புகார்கள் போய் இருக்காம். கூட்டணி பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் தொகை எங்கிருந்து எப்படி வருது, அது காக்கி மாஜி தரப்பு எப்படியெல்லாம் முதலீடு பண்ணிட்டு வருதுன்னு மேலிடத்துக்கு நெருக்கமானவங்க கிட்ட சொல்லிட்டங்களாம். இதை தெரிஞ்சுக்கிட்ட மேலிடம், வசூல்ல வச்ச கவனத்தை தேர்தல் வேலைகளில் காட்டியிருந்தா ஜெயிச்சிருக்கலாமே, கட்சிக்கு நிதின்னு சொல்லி தனிப்பட்ட முறையில பணத்தை வாங்கிட்டு இருக்கீங்களா? என காக்கி மாஜி தரப்புகிட்ட கோபத்தை காட்டியிருக்காம்.
ஜெயிக்குறதுக்காக ஒரு இடத்தில கூட நீங்க வேலையே பாக்கல, ஆனால் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல, நீங்க சொல்ற காரணத்தை எல்லாம் இனி நாங்க கேட்க தாயார் இல்லை. எங்களுக்கு ரிசல்ட் தான் முக்கியம். இப்போ போங்க, நேரம் வரும்போது நாங்க சொல்றபடி தான் இனி நீங்க நடந்துக்கணும்னு காக்கி மாஜிக்கிட்ட சொல்லி அனுப்பியிருக்காம். அந்த கோபத்துல வந்த காக்கி மாஜி, உள்கட்சி விவகாரங்களில் கொஞ்ச நாளைக்கு ஜென் மோடுல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டாராம்.
மேலும் படிக்க | கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ