கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி - கடுப்பில் ஆளும் தரப்பு..!
Gossip, கிசுகிசு : ஆளும் தரப்பை நோக்கி கதர் புள்ளி எழுப்பும் கேள்விகள் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Gossip News Tamil : காலையில் கதர் சட்டையோடு டீக்கடைக்கு போன குசும்பன், " அண்ணே! இன்னைக்கு ஒரு சுக்குப் பால் போடுங்க..!" என ஆர்டர் போட்டான். அப்போது அவனை பார்த்த டீ மாஸ்டர் " தம்பி, என்னப்பா.. ஒரே கதர் வேட்டி, சட்டையோட வந்திருக்க, இன்னைக்கு மேட்டர் அதை பத்தி தான் போல" என்றார். "நீங்களும் என்னோட குறியீடு எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்க போல" என குசும்பன் சொல்ல, "சரி.... சரி... நீட்டி முழக்காம மேட்டருக்கு வாப்பா.. " என்றார் மாஸ்டர். ஆர்டர் செய்த சுக்குப்பாலை கையில் வாங்கிக் கொண்டு மேட்டரை ஆரம்பித்தான் குசும்பன். " அண்ணே, வாரிசு கதர் புள்ளி கொடுக்கிற குடைச்சல் ஆளும் தரப்பை செமையா கடுப்பு ஏத்தியிருக்கு. கதர் கட்சியோட இருப்பை நாம காட்டியாகணும்னா, கூட்டணிக்குள்ள இருந்தாலும் தப்பை எல்லாம் சுட்டிக்காட்டணும், அதுக்குன்னு எதுமே கேட்காம எல்லாம் இருக்க முடியாதுங்கிறார் அந்த வாரிசு கதர் புள்ளி.
மேலும் படிக்க | கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?
இப்படியே அமைதியா இருந்து இருந்து தான் நாம இருக்கிற இடம் தெரியாம இருக்கிறோம். இங்க இருக்கிற கதர் கட்சிக்காரங்கனு நமக்குன்னு நமக்கு என்ன மரியாதை இருக்கு. அரசியல்ல இருக்கிறோம்ங்கிறதுக்காவது நாம பேச வேண்டாமா?. இருக்கிற இடம் தெரியாம இருந்து இருந்து தான் இப்போ நாம இருக்கிறதே மக்களுக்கு தெரிய மாட்டேங்குது. பூ கட்சிக்காரங்க மாதிரி இறங்கி அரசியல் வேலை செய்யணும், கூட்டணியினாலும் தப்ப சுட்டிக்காட்டணும், அப்பதான் நமக்கான செல்வாக்கு மக்கள் கிட்ட உயரும்ன்னு சொல்றாரு அவர். இவரோட இந்த அணுகுமுறை கதருக்குள்ள இருக்கிற பலருக்கு பிடிச்சிருந்தாலும் வெளிப்படையா அந்த கதர் வாரிசு புள்ளிய பாராட்ட மாட்டேங்குகிறாங்க.
சிலர், இவருக்கு பதவி வந்தா போதும்னு பேசிட்டு இருக்கிறாரு. உள்ளாட்சியில கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கிடைக்க வேண்டாமா?, அதுக்கு ஆளும் தரப்போட அனுசரிச்சி தான போகணும்னு வாரிசு புள்ளிக்கு எதிராக உக்கிரத்துல பேசிட்டு இருக்காங்க. கதர் கட்சிக்குள்ளேயே வாரிசு புள்ளியால சலசலப்பு உருவாகியிருக்க சூழல்ல, தேசிய தலைமை ஆளும் தரப்பை கொஞ்சம்கூட பகைச்சுக்கு வேண்டாம்னு மெசேஜ் தட்டிவிட்டுருக்கு. இருந்தாலும் வாரிசு புள்ளி என்னோட இயல்பை மாத்திக்கமாட்டேன் என கறாரா இருக்காரு.
அவரோட இந்த அணுகுமுறை ஆளும் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கு. அதுவும், தலைநகரத்தோட பவர்புல் உள்ளாட்சி பொறுப்புல இருக்கிற பெண் தலைவருக்கு கடிதம் எழுதி, அதை பொதுவெளியில் போட்டதுக்கு அப்புறம் இந்த கோபம் அதிகமாகியிருக்காம். மாண்புமிகுக்களே வாரிசு கதர் புள்ளிக்கு பாடம் புகட்டணும்னு தலைமை கிட்ட சொல்லியிருக்காங்களாம். இப்போதைக்கு அமைதியா இருங்கனு தலைமை சொல்லியிருக்கிறதால, வாரிசு கதர் புள்ளிக்கு பதிலடி ஆளும் தரப்புல இருந்து யாரும் கொடுக்கலையாம். நாம அவருக்கு பதில் கொடுத்தா தேசிய அளவுல இதை பெரிசுபடுத்தி பூ கட்சி ஆதாயம் தேடிக்கும், அதுக்கு நாம இடம் கொடுக்ககூடாதுன்னு ஆளும் தரப்பு நினைக்குதாம். அவர கொஞ்சம் பாருங்க, இல்லைன்னா எங்களை நீங்கள் குறை சொல்லக்கூடாதுன்னு டெல்லி கதர் தலைகளிடமும் சூரிய கட்சி தரப்பில் இருந்து கோபமான மெசேஜ் சொல்லப்பட்டிருக்காம். அதையும் மீறி வாரிசு புள்ளி ஏதாச்சும் செஞ்ச அப்புறம் பாத்துக்கலாம்ங்கிற முடிவுல ஆளும் தரப்பு இருக்கு" என சொல்லி முடிக்கும்போது சுக்குபாலையும் குடித்து, டீக்கடையில் இருந்து விடைபெற்றான் குசும்பன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ