கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!
Gossip, Tamilnadu Politics : காக்கிகளுக்குள் நடந்திருக்கும் அதிரடி மாற்றத்துக்கு பின்னணியில் முதன்மையானவரின் நேரடி தலையீடே இருக்கிறதாம். இனி இந்த துறைக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் பொறுப்பில் இருப்பவர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள், எந்த லாபிக்கும் இனி இடமில்லை என்பதை முதன்மையானவர் தெரிவித்துவிட்டாராம்.
இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த குசும்பன், சிரிச்ச முகத்துடன் டீ கடைக்கு வர்ற, ' என்னய்யா... ரெண்டு நாளா ஆளைக் காணோம் எங்க போயிருந்த?’ என டீக்கடை மாஸ்டர் கேட்டார். ‘ அதானே, கோட்டைப்பக்கம் போயிருந்தேன். அங்கு கொஞ்சம் சூடான சூழலும், பரபரப்பும் இருந்துச்சா, அங்கேயே டென்ட் போட்டு தங்கிட்டேன்.’ என்றான். ’அப்போ உன் கிட்ட இன்னைக்கு நிறைய மேட்டரு இருக்கு போலயே’ என ஆர்வத்துடன் கேட்க டீ மாஸ்டர், ‘ ஆமாம் இருக்குண்ணே.. ஒவ்வொன்னா சொல்றேன்... கேளுங்க’ என ஆரம்பித்தான் குசும்பன்.
’ மாஸ்டர் அண்ணே, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி முதன்மையானவர் கடுகடுப்பில் தான் இருக்கிறார். அவரது துறைக்குள்ளேயே பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்ததால, செம டென்ஷன் ஆயிட்டார். அதுவும் மாநகரத்திலேயே நடந்த அந்த கொலை, ஆட்சிக்கும், கட்சிக்கும் இருக்கிற மரியாதையே தேசிய அளவுல கெடுக்கிற மாதிரி அமைஞ்சதனால, இனி யாரா இருந்தாலும் பேவரிட்டிசம் காட்டக்கூடாதுங்குற முடிவுக்கு முதன்மையானவர தள்ளிடுச்சு. அதனால், காக்கிக்கள் இடமாற்றம் பைல உடனே ரெடி பண்ணுங்கனு ஆர்டர் போட்டவரு, சட்டம் ஒழுங்கு மற்றும் மாநகர தலைமை பொறுப்புக்கு யாரு வர்றனும்ங்கிறத தானே முடிவு செஞ்சிருக்காரு. இனிமேல், இந்த துறைக்குள்ள பிரச்சனை வந்துச்சுனா, பொறுப்பில் இருப்பவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது, தூக்கியடிக்கப்படுவீர்கள் என்ற வார்னிங்கும் சேர்ந்தே முதன்மையானவர் தரப்பில் இருந்து பொறுப்பில் இருக்கும் காக்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கு.
மேலும் படிக்க | கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?
சட்டம் ஒழுங்கு சரியில்லைனு எதிர்கட்சிகள் நரேடிவ் செட் செய்யுறதுக்கு ஏற்ப காக்கிகள் செயல்பட்டது தான் அவரோட இந்த கடுகடுப்பு இன்னொரு முக்கிய காரணம். இப்படியே போன ஆட்சிக்கே ஆபத்து வந்துரும்ங்கிறத உணர்ந்துதான் இந்த அதிரடி மாற்றங்கள் காக்கி துறைக்குள் நடந்திருக்கு. அதேநேரத்துல, காக்கிகளுக்குள் இருக்கும் சில பிளாக்ஷீப்களை கண்டுபிடிச்சு களையெடுக்கனும் என்ற எண்ணமும் முதன்மையானவருக்கு இப்போது வந்திருக்காம். ஏன்னா, ஆட்சிக்கு ஆதரவா இருக்கிற மாதிரி காட்டிக் கொண்டு, பூ கட்சி நரேடிவ்வுக்கு ஏற்ப சூழலை மாத்திவிடுறதையும், சில முக்கிய விஷயங்களை அவங்களுக்கு கொடுக்கிறதையும் முதன்மையானவர் தரப்பு நோட்டம் விட ஆரம்பிச்சிருக்கு. இதில் என்ன வேடிக்கைனா, ’ரகசிய துறையில்’ இருப்பவர்களே இந்த வேலையை செய்யுறதாவும் முதன்மையானவர் தரப்பு சந்தேகப்படுறாரு.
அதனால், காக்கிகளுக்குள் நம்பிக்கைக்குரியவங்கள் பட்டியலை ரெடி பண்ணி, மாநிலம் முழுவதும் முக்கிய போஸ்டுகளுக்கு போடவும் முதன்மையானவர் தரப்பு முடிவெடுத்திருக்கிறதாம். ஆட்சிக்கு எந்தவிதத்தலையும் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் முதன்மையானவரின் எண்ணமாம். அதுக்காக எந்த நடவடிக்கையும், யாரு மேல வேண்டுமானாலும் எடுக்க தயார் என்பதையும் தெரிவித்துவிட்டாராம் முதன்மையானவர்.’ என குசும்பன் முடிக்க, ‘ அதுசரிப்பா, ஒவ்வொரு ஜாதி வாட்சப் குரூப்பிலும் அந்தந்த சாதிக்கார காக்கிகள் வேறொரு பெயரில் இயங்குறதையும், அப்படி இருக்கிறவங்க பெரும்பாலும் பூ கட்சி மற்றும் ’எஸ்’ இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பரப்பிக்கிட்டு இருக்கிறாங்க என்ற தகவல் முதன்மையானவருக்கும், காக்கிகளுக்கு பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாதா?’ என டீ மாஸ்டர் கேட்க, குசும்பன் ஷாக்காயிட்டார்.,
‘ என்னன்ணே, இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?’ என குசும்பன் கேட்க, ’நான் இருக்கிற வாட்ஸ்அப் குரூப்பிலையும், ரெண்டு மூன்று காக்கிகள் இருக்கிறாங்கப்பா, ஆனால் அவங்க எங்க சாதிக்காரங்களா, இல்லையானு கூட யாருக்கும் தெரியாது. இருந்தாலும், அவங்களோட பதிவு எல்லாமே பூ கட்சியோட தாய் இயக்கம்னு சொல்லப்படுற ‘எஸ்’ இயக்கம் இருக்கு இல்லையா..? அதுக்கு ஆதரவா தான் அவங்களோட பதிவு இருக்கு. ரொம்ப நாளாக குருப்புல இருக்கிறதால, அவங்கள காக்கினு பல்வேறு சந்தர்ப்பங்கள பேசும்போது கண்டுபிடிச்சுட்டேன். இதுமாதிரி பல ஊர்களிலும், உக்கிரமான சாதிகள் என்று சொல்லப்படுறங்க குரூப்லையும் இருக்க வாய்ப்பு இருக்கு இல்ல?’ என டீ மாஸ்டர் கேள்வியை போட, குசும்பன் யோசித்த ஆரம்பித்தான்.
‘ அண்ணே நீங்க சொல்றது சரிதான்.... எனக்கும் இந்த மேட்டர் தெரியும். காக்கிகளில் உயர் பொறுப்பு இருப்பவங்களுக்கூட தெரியும். இருந்தாலும் இதை எல்லாம் எப்படி தடுக்க முடியும்னு தெரியலைண்ணே. ஆட்சி விசுவாசிகள் முதன்மையானவர் கிட்ட இது குறித்து சொன்னால் தான் உண்டு.’ என குசும்பன் சொல்ல, ‘அது சரி பூ கட்சி மாநில தலைமை பேட்டியை பார்த்தீயா?’ என டீ மாஸ்டர் கேட்டார். ‘அண்ணே... அவரோட பாடி ஸ்லாங்க், பத்திரிக்கைகாரங்க கிட்ட பேசுன விதம் எல்லாத்தையும் கவனிச்சேன். இந்த விஷயத்தையும், சினிமா வாரிசு கட்சிக்கு தூதுவிடும் அந்த ஆலோசகர் மற்றும் முன்னாள் தலைகள் குறித்தும் அப்புறம் விரிவா பேசலாம். அதுக்குள்ள எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்குனு’ சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டார் குசும்பன்.
மேலும் படிக்க | கிசுகிசு : பிளாக் ஷீப்களால் வரும் நெருக்கடியால் செம டென்ஷனில் முதன்மையானவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ