தமிழகத்தில் (Tamil Nadu), கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து கடந்த 18 மாத காலங்களாக,  அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பேருந்துகள், இயக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கொரோனா தொற்று (Corona Virus) பரவல் குறைந்து வருவதை அடுத்து, மீண்டும் ஏசி பஸ் சேவையை தொடக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இயக்கப்படாமல் இருக்கும் சுமார் 702 ஏசி பேருந்துகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் அளித்துள்ளார். குளிர் சாதன பேருந்து சேவைகள் (AC Bus Service), கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளைகளையும், சமூக இடைவெளியையும்  முழுமையாக பின்பற்றி இயக்கப்படும். 


ALSO READ | தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை: அன்பில் மகேஷ்


இதை அடுத்தும் பேருந்துகளை மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பேருந்திற்குள் அனுமதிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. 


முன்னதாக, ஏசி பேருந்துகளை நீண்ட காலம் தொடர்ந்து இயக்காமல் இருந்தால், ஏசி இயந்திரங்கள் பழுதடையும் என்பதோடு, பழுது பார்க்க பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டி வரும் என்பதால், ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்கினால் வருவாய் இழப்பை ஓரளவு சரி செய்யலாம் என முன்னதாக போக்குவரத்து கழகம் சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது - சவுமியா சுவாமிநாதன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR