தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை: அன்பில் மகேஷ்

தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பின்பற்றப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 23, 2021, 12:40 PM IST
  • தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.
  • கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பின்பற்றப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகள் திறப்பு இல்லை: அன்பில் மகேஷ்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் 2020 மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்த நிலையில் ஆன்லைன் நாடு முழுவதும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 

தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பின்பற்றப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுடன் ஆலோசனை நடத்தி ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளார். 

ALSO READ: சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்

அந்த ஆய்வறிக்கை சில நாட்கள் முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் (MK Stalin) ஒப்படைக்கப்பட்டது. பள்ளிகளை எப்போது திறக்கலாம்? திறந்தால் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன? பள்ளி திறப்பினால் ஏற்படவிருக்கும் சிக்கல்கள் என்ன என்பன அந்த அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 

கல்வி அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை முதலமைச்சர் ஆராயந்து பார்த்து பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை அறிவிப்பார் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தற்போது 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் (TN Schools) சுமூகமாக நடைபெற்று வருவதால் விரைவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது. 

இதற்கிடையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இது குறித்த தகவலை அளித்தார்.  அதில் அவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பெற்றோர் மத்தியில் இன்னும் கொரோனா பரவல் குறித்த அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை எனக் கூறினார். கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொறுத்தே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நேற்று, தமிழ்நாட்டில் 1,682  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,50,370  ஆக உயர்ந்துள்ளது மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது - சவுமியா சுவாமிநாதன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News