அரசு ஊழியர்கள், பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிதல் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது... 1986-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் தங்களது பணி நேரத்தின் போது தங்கள் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் எனவும். இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.


வள்ள நாராயணின் இந்த கடிதத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 


வழக்கின் விசாரணையின் போது போது, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக, புதிதாக வழங்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பெயர் பலகை வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.