இந்தியாவிலேயே தமிழகம் மருத்துவத்துறையில் முதலிடத்தில் உள்ளதோடு, சாதனைகள் படைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டியில், நீர் சேமிப்பு தொட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் மற்றும் காத்திருப்போர் அறை ஆகியவை கொண்ட புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.


பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், சேலம் மாவட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு பற்றிய விவரங்களை விளக்கினார். மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம் வகிப்பதோடு, சாதனைகள் படைப்பதாகவும், அதிநவீன சிகிச்சைக்குரிய கருவிகள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக விளங்குவதாகவும் முதலமைச்சர் கூறினார்.



விவசாயிகள் மேம்பாடு, நீர் மேலாண்மை மற்றும் கல்வித்துறைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கிப் பேசினார்.