பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை அத்கரித்துள்ளதாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 40 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியில் சில மாற்றங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலானது. 


அதன்படி, பெட்ரோலுக்கு மதிப்புக்கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கு 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் 25 காசாகவும், டீசல் விலை 2 ரூபாய் 50 காசாகவும் உயர்ந்துள்ளது.



இந்நிலையில், கலால் வரி உயர்வு குறித்து மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்யாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.