ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடம்பூரை அடுத்த குன்றி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் நம்பியூர் அருகே தனியார் பொதுசேவை மையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரின் சகோதரிக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு தேவையான சான்றிதழ்களை தயார் செய்து வைக்கும்படியும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?


இதனைதொடர்ந்து அரசு பணியில் இணைவதற்கான சான்றிதழ்களை தயார் செய்தபின் அந்த இளம்பெண் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம்  சான்றிதழ்களை கொண்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த இளம்பெண்ணிடம் வீட்டிற்கே வந்து சான்றிதழ்களை வாங்கிகொள்வதாக கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் தெரிவித்துள்ளார். பின்னர், சுட்டிக்கல்மேடு பகுதியில் உள்ள இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் சான்றிதழ்களை பெறுவதற்காக வந்துள்ளதாக கூறிய முருகேசன், மெதுவாக பேச்சுக்கொடுத்தபடியே அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையிலடைத்தனர். இளம்பெண்ணிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ