தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு (Vanniyar community) மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு (Reservation) வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 


ALSO READ | 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: போராட்டத்தில் இறங்கிய பாமக-வினர்


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.


இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இதனிடையே, அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் நீதிபதிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்நிலையில் தற்போது வன்னியர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5% உள்இடதுக்கீடு அளித்து தமிழக அரசு இயற்றிய  சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.


அதில் மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனவும், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை எனவும், ஏற்கனவே மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இந்த உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல அதில் 7 பிரிவினருக்கானது கூறப்பட்டுள்ளது. 


ஏற்கனவே இதே போல பிறப்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீட்டும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாகவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் தான் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரணைக கு எடுத்து, எதிர் மனுதாரர்கள் கருத்தை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உடனடியாக  தடை விதிக்க வேண்டும் (Ex-party order), அதற்கான உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.


ALSO READ | வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்து -உயர்நீதிமன்ற அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR