தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் இனி 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும், 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த அரசாணை பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


மத்திய தொழிலாளர் நலத்துறை முதன்மை ஆணையர் அளித்த பரிந்துரையை ஏற்று தமிழக இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைப் படி அனைத்து பணியாளர்களுக்கும் வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், வேலை நேரத்திற்கு அதிகமான நேரம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கூடுதல் பணிக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதேவேலையில் கூடுதல் பணி நேரத்தையும் சேர்த்து பணியாளர்கள் 10 மணிநேரம் 3 நிமிடங்களுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.


அதேபோல், பெண் பணியாளர்களை இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளத. அவ்வாறு பெண் பணியாளர்கள் பணியாற்ற விரும்பினால், அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.


மேலும் இரவு நேரங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு கழிப்பறை, பாதுகாப்பு லாக்கர்கள் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.