கவர்னர் அழைப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டாட்டம்
சசிகலா ஆதரவு எம். எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் 10 நாட்களாக தங்கி உள்ளனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் முகாமிட்டு இருந்தனர்.
சென்னை: சசிகலா ஆதரவு எம். எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் 10 நாட்களாக தங்கி உள்ளனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் முகாமிட்டு இருந்தனர்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் அழைக்கும் வரை அங்கிருந்து செல்வது இல்லை என்று முடிவோடு இருந்தனர்.
விடுதியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவர்னர் எப்படியும் இன்று அழைப்பார் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தனர்.
எம்.எல்.ஏ.க்களை செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்தார்.
அப்போது ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்ததையடுத்து விடுதியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆட்சி அமைக்க போகிறோம் என்ற உற்சாகத்தில் விடுதியில் துள்ளி குதித்தனர்.
பொதுச்செயலாளர் சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆற்றிய உருக்கமான கடைசி உரை தங்களை ஒருங்கிணைத்து உள்ளது என்று ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தெரிவித்தனர்.