அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்; தேடல் குழு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்
துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
சென்னை: காலியாக உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலும் இருந்து 162 பேராசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு வழக்கத்திற்கு மாறாக தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவர் பலர் விண்ணப்பித்திருந்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட 'தேடல் குழு' இவ் விண்ணப்பங்களை பரிசீலித்து அதில் இருந்து மூன்று பேரை தேர்வு செய்து அதில் இருந்து ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார்.
இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். 3 பேரையும் நேர்காணல் செய்த பின், அவர்கள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை என்று பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆளுநரின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேடல் குழுவுக்கு மாற்றாக புதிய தேடல் குழு அமைத்து, மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான 3 பேரை பரிந்துரைக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR