சட்டப்பேரவையில் நடந்ததை குறித்து ஆளுநர் அறிக்கை கோரியுள்ளார்
எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தமிழக சட்டப்பேரவையில் நிரூபித்தார். அதற்கு முன் நேற்று முன்தினம் காலை முதல் ஏற்பட்ட அமளி குறித்தும், எதிர்கட்சியினரான மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் ஓபிஎஸ் அணியும், எதிர் கட்சியான மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த புகாரின் பேரில் அறிக்கை கோரியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.