சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள் என கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-


முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெயலலிதாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்தது. தமிழக அரசு மிகவேகமாக செயல்பட்டதற்கு பெருமையடைகிறேன்.


ராஜாஜி அரங்கு முதல் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா வரை மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு தமிழக போலீசார் அளித்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூடி இருந்தும் சிறப்பான முறையில் அவர்களை கட்டுப்படுத்தப்பட்டனர். சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவல்துறை மீது அக்கறைகொண்டிருந்தார். சென்னை போலீசார் சூழ்நிலையை சிறந்த முறையில் கையாண்டனர். இக்கட்டான சூல்நிலையில் எப்படி செயல்படுவது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். 


ஓய்வின்றி உழைத்த ஒவ்வொரு காவலருக்கும் எனது பாராட்டுகள். சென்னை மாநாகர காவல் துறைக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.