ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு
நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
தமிழக ஆளுர் ஆர்.என்.ரவி குடியரசு தினவிழாவையொட்டி விடுத்த வாழ்த்துச் செய்தியில், மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத்தில் உள்ள மாணவர்களும் பிற இந்திய மொழிகளை பயில வேண்டும். இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். மேலும், நீட் தேர்வுக்கு முன்பைவிட நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது என தெரிவித்திருந்தார்.
ALSO READ | 5 நிமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திய அமித்ஷா..!
அவரின் இந்தக் கருத்து ஆளும் திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு பதில் சொல்லும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் "கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், நீட் தேர்வு மற்றும் இருமொழிக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்தும், மக்கள் பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டிருப்பது குறித்தும் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அமைச்சரவை நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் ஆளுநரிடம் கிடப்பில் இருக்கும் நிலையில், அவர் எப்படி இத்தகைய கருத்துகளை தெரிவிக்கலாம்? என்று அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட வேண்டாம். இது நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு என்று எச்சரிக்கும் விதமாக அந்தக் கட்டுரையில் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுரை நேற்று வெளியான நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
ALSO READ | மாநிலங்களில் ஆட்சி உறுதி - அடித்து சொல்லும் காங்., தலைவர்
மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியின் திருவுருப்படத்துக்கு இருவரும் மாலை அணிவித்து, திருவுருப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR