அரசு பஸ் - மணல் லாரி மோதிக் கொண்டதில் 6 பேர் பலி
அரசுப் பஸ்சும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலி
அரசு பஸ் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, மேட்டூரில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், சேலத்திலிருந்து தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 6 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர் என கூறினார்கள்.
காயமடைந்தவர்கள் ஒமலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் முத்துக்குமாரும், நடத்துனர் சுரேந்ந்திரனும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொப்பூர் பிரிவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.