சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டிஉள்ளார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை நுங்கம் பாக்கத்தில் மற்றும் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 
மொத்தம் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 


மத்திய நிதியமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இன்று சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்த சிபிஐ சோதனை தொடர்பாக அவர் கூறியதாவது:-


நேரடி அன்னிய முதலீடு அலுவலக அமைப்பு மூலம் தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதில், சம்பந்தப்பட்ட 5 செயலர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறுவது அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல். என் மகன் உட்பட என்னை சார்ந்தவர்களை குறிவைத்து மத்திய அரசு சிபிஐ போன்ற நிறுவனங்களை பயன்படுத்துகிறது. 


 



 


சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. நான் பேசுவதையும், எழுதுவதையும் இதுபோன்ற சோதனைகள் மூலம் தடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனாலும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.