சென்னை: ஜனவரி 3 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த 29 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால், முழு தேர்தல் முடிவு வெளியாக நாளை வரை ஆகலாம் ஆகலாம் என்பதால், ஜனவரி 4 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தது.இதன்படி முதல்கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப் பதிவு கடந்த 27 ஆம் தேதி முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46,639 பதவிகளுக்கு நடந்து முடந்தது. அதில் 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவானது.


ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜனவரி 2 ஆம் தேதி காலை தொடங்கியது. ஆனால் இன்று தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நாளை வரை நீடிக்கலாம் என்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் ஜனவரி 6 ஆம் தேதி தான் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


முதலில் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அதன் பிறகு 3 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், கடைசியாக ஜனவரி 4 ஆம் தேதி (சனிக்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணும் பணியை வைத்து பார்த்தல், நாளை வரை தொடரும் என்பதால், நாளை (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சனவரி 6 திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.


இதன்மூலம் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், படிப்படியாக நாட்கள் அதிகரித்து, தற்போது இறுதியாக ஜனவரி 6 (திங்கக்கிழமை) அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது