சென்னை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சொட்டு மருந்துகளை (Vitamin-A Oral Drops) வழங்குவதற்கான முகாம்கள் செப்டம்பர் 4 வரை நடத்தப்படும் என்று கிரேட்டர் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் வைட்டமின்-ஏ முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றதாகவும், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 28 வரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres) மற்றும் கார்ப்பரேஷன் மகப்பேறு மருத்துவமனைகளில் (Corporation Maternity Hospitals) முகாம்கள் நடத்தப்படும் என்றும் சென்னை கார்ப்பரேஷன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ வழங்கப்படும்.


“முகாம்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படும். முகாம்களின் இரண்டாம் கட்டம், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை அனைத்து நாட்களும் நடத்தப்படும். மேலும், மருந்தைப் பெற தவறவிட்ட குழந்தைகளுக்காக ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் காய்கறி அங்காடி சேவை தொடரும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வைட்டமின்-ஏ வழங்கப்பட வேண்டும். குடிமை அமைப்பு (Civic Body) ஆண்டுக்கு இரண்டு முறை இந்த முகாம்களை நடத்துகிறது.


"COVID-19 தடுப்பு நடவடிக்கைகள் முகாம்களில் பின்பற்றப்படும். முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வருபவர்களின் வெப்பநிலை வெப்ப ஸ்கேனர்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட முகாம்களுக்கு வரும் பொது மக்களும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமாகும். 


ALSO READ: இந்தியாவில் 31.67 லட்சம் பேருக்கு கொரோனா... 58,390 பேர் உயிரிழப்பு!!