தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இதற்க்கு பிறகு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க் களின் விவாதம் மார்ச் மாதம் 24-ம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., சரவணன் பேசி வெளியான வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினார்.


ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், தீர்மானத்திற்கு அனுமதி வழங்க சபாநாயகர் தனபால் மறுத்தார். இதனால், திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். 


இதையொட்டி கடும் அமளிக்கு இடையே தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்வதற்கு தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சபாநாயகர் தனபாலிடம் அனுமதி கோரினார். தனபால் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.