182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில் எப்போதும் போல தேர்தலுக்கு முன்பு கருத்து கணிப்புகளை ஊடகங்கள் நடத்தி வருகின்றன. இந்த முடிவுகள் பாஜகவுக்கு எதிரானதாக இருக்கின்றன. 


இந்நிலையில் கருத்து கணிப்புகள் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது,


குஜராத் தேர்தல்கள் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் பல கருத்து திணிப்பு முயற்சிகள் ஊடகங்களில் பரப்பப்படுகிற்றன. அவர்கள் நம்புவது ஹர்திக் படேலை. மிகப் பிரபலமான நிர்வாகத்திறமை மிக்க திரு கேசவ்பாய் படேல் தனிகட்சி அமைத்து போட்டியிட்டுத் சென்ற தேர்தலில் பா.ஜ.க வென்றது. இது வெறும் பச்சா என்று குறிப்பிட்டுள்ளார்.