குரு பரிகார பூஜை செய்ய திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!
குரு பெயர்ச்சியையொட்டி பரிகார ஸ்தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இரண்டாம் நாளாக பக்தர்கள் தங்கள் ராசிக்கான பரிகார பூஜை செய்தனர்.
குரு ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கோயிலான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்நிலையில் நேற்று குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.20 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையடுத்து அந்தந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கான பரிகாரத்தை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி
நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் குரு பகவானை தரிசனம் செய்தும், தங்கள் ராசிக்கான பரிகாரத்தை செய்தும் வருகின்றனர். இதனை தொடர்ந்து வருகிற ஒன்றாம் தேதி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற இருக்கிறது.
இதற்கான தொகையை செலுத்தி தங்கள் பரிகார ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை கலந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருகை ஒட்டி சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கோயில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் குரு பகவான் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட குரு பகவானை வழிப்பட்டு தங்களுக்கான பரிகார பூஜையை செய்து கொண்டனர்.
மேலும் படிக்க | இன்னும் 24 மணி நேரம்..குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ