குட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக SB ஜெயக்குமாருக்கு சம்மன்
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்...
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்...
குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இதில் 2014 ஆம் ஆண்டு செங்குன்றம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார் சம்பத்.
அதில் அப்போதைய துணை ஆணையர் ஜெயக்குமாரின் உத்தரவின் படி 2014 ஆம் ஆண்டு குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை சோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும் மற்ற விவகாரங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக விசாரணையின் போது முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், ஜெயக்குமார் தன்னிடம் தகவல் தரவில்லை என கூறி இருந்தார். தற்போது இதன் முக்கிய திருப்பமாக விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி-யாக பணிபுரிந்து வரும், ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
குட்கா முறைகேடு நடைப்பெற்ற காலத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக சென்னையில் பணியாற்றியிருக்கிறார் எஸ்.பி ஜெயக்குமார். அவர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் தருமாறு உத்தரவிடப் பட்டுள்லது.