ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன்படி ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500லிருந்து 3000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 


தமிழக பட்ஜெட் தாக்கலை அடுத்து கடந்த 17 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி, ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் ஏற்பாடு செய்துதரப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000-ஆக உயர்வு என தமிழக  சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


மேலும், உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.