ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புரட்சித் தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


இதே போன்று எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு பழனிசாமி இனிப்புகளை வழங்கினார். மேலும் நலிந்த பிரிவினருக்கு நிதியுதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


அதன் பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


ஹஜ் புனிதபயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து, தர முடிவு எடுக்கப்படும்.


உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து, தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசுதான் பெற்றுத்தர வேண்டும்.


இந்த விஷயத்தில், மத்திய அரசு தலையிட்டு விரைவில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர வேண்டும். காவிரி நீரை மத்திய அரசால் மட்டுமே பெற்றுத் தர முடியும் என்றார்.