சென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, உறவினர்கள் உடலைப் பெற்றனர்.


சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினியை இளைஞர் ஒருவன் கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி அஷ்வினியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அஷ்வினி பரிதாபமாக மரணமைதார்.


இதனிடைய அஷ்வினியை கத்தியால் குத்திய இளைஞனை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கத்தியால் குத்திய வாலிபரையும் பொதுமக்கள் கடுமையாக தாக்கியதால் இளைஞனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞரின் பெயா் அழகேசன் என்பதும் மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. 


ஏற்கனவே அஷ்வினிக்கு அழகேசன் பலமுறை காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இளைஞன் மீது மாணவி அஷ்வினி ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகதான் இச்சம்பவம் நடைபெற்றிருப்பதுமாக கூறப்படுகிறது.


இந்நிலையில், சென்னையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள அஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  


அழகேசனுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பின்னர், காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, உறவினர்கள் உடலைப் பெற்றனர்.