ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்தநாள்
தமிழகத்தின் தலைநகராமாக இருக்கும் சென்னைக்கு இன்று 378-வது பிறந்தநாள்.
ஆங்கிலேயர்கள் சொல்லிவைத்தபடி சென்னைக்கு இன்று 378வது ஆகிறது. சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது.
சென்னை தினம் கொண்டாட உருவான கதை:-
கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கினார்.
அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் உதவியாளர் பெரிதம்மப்பா இதற்கு உதவிசெய்திருக்கிறார். 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி அந்த நிலத்தை வாங்கி, அங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
நிலத்தைக் கொடுத்து உதவிய அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை நகரின் வடக்கு பகுதிக்குச் சூட்டியது கிழக்கிந்தியக் கம்மெனி.
பூந்தமல்லி சகோதரர்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு நிலம் கைமாறிய ஆகஸ்ட் 22-ம் தேதிதான் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.