சென்னை: கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவு கொடுமை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு சம்பவம் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரியலூர் அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர் தமிழாசிரியர் அருள்செல்வன். அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் அருள்செல்வன், பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் பல மாணவர்களிடமும் மற்றும் பயிற்சி ஆசிரியைகளுக்கும் அவர் பாலியல் தொந்தரவு (sexual harassment) கொடுத்து வந்துள்ளார்.


ஆசிரியரின் தவறான நடத்தைக் குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்கள். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு இன்று பெற்றோர்கள் மறியல் செய்தனர்.


தகவலறிந்து பள்ளிக்கு வந்த அரியலூர் காவல்துறையினர்,  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், தமிழாசிரியர் அருள்செல்வனை காவல்நிலையம் அழைத்து சென்று செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதோடு, பள்ளியில் யார், யாரிடம் பாலியல்ரீதியான தொந்தரவை அவர் மேற்கொண்டார் என்ற விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.


ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது


தமிழ் ஆசிரியர் அருள்செல்வன் மீதான விசாரணையை துரிதமாக நடத்தி அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் (Parents of the Students) கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் தமிழாசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் (Pocso act) கைது செய்தனர்.


மேலும், அருள்செல்வன் மீது புகார் தெரிவித்த போது நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் அரியலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மாணவ-மாணவிகளையும், பெற்றோரையும் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி எச்சரித்ததாக கூறப்படுவதால், குற்றத்திற்கு துணை போன குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


READ ALSO | நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR