CCTV Footage: நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்

நீலகிரி மாவட்டத்தில்  சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காட்டும் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2021, 11:55 AM IST
  • நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்
  • கோத்தகிரியில் கரடி நடமாட்டம்
  • சிசிடிவி பதிவுகள் வெளியானதால் மக்கள் பீதி
CCTV Footage: நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள் title=

உதகமண்டலம்: கோத்தகிரியில்  உள்ள தனியார் மருத்துவமனையில் கரடி நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், அதன் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியானதால் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறை (Forest Department) முடிவு செய்துள்ளது. கோத்தகிரியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலங்குகள்
கோத்தகிரி அருகே மிஷன் காம்ப்பவுண்ட் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தனியார் மருத்துவமனை உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இம்மருத்துவமனை அமைந்துள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டு மாடு,சிறுத்தைபுலி ,கரடி போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று மருத்துவ மனை வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் (CCTV Camera) பதிவான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விலங்கு

மருத்துவமனை வளாகத்தில் கரடி உலா வந்த சம்பவம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் உலாவரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் இந்திரா நகர் பகுதி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது.

வனத்துறை

இந்த பகுதியில் சமீபகாலமாக வளர்ப்பு நாய்கள் அடிக்கடி காணாமல் போயிருக்கின்றன. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் சிறுத்தை வளர்ப்பு நாய்களை வேட்டையாடுவதற்கு வந்து செல்வது பதிவாகியிருக்கிறது. இந்திரா நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சிறுத்தைகளால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன.

READ ALSO | முந்துங்கள்! தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News